Burnad Fathima Natesan அவர்களுடைய தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற "தலித் பெண்கள் மீதான வன்முறை" கருத்தரங்கத்தில் கலந்து கொண்டேன்.
மதுப்பழக்கத்தை, போதையை நம்முடைய வீடுகளில் திணிக்கும் அரசை விமர்சனம் செய்யும் அதே வேளையில், குடும்ப வன்முறையிலிருந்து விடுதலை ஆகி அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் பொழுது தான் முழுமையான விடுதலையை உணர முடியும். வீட்டிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, சமூகத்தில் வெற்றி பெற்றவுடன், பொருளாதார தன்னிறைவு ஏற்பட்டதும் அதோடு அமைதியாக சென்று விடாமல், தலித் பெண்கள் பொது தளத்தில் தங்களுடைய கருத்துக்களை வைப்பதும் அரசியலில் ஈடுபடுவதும் மிக முக்கியம்.
Poor Dalits go through more violence and also the invisible Dalits. ஆகவே தலித் ஆண்களே வேண்டாம் என்று நினைத்தால் கூட அதை மீறி தலித் பெண்கள் புது தளத்தில் தங்களுடைய பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும்.
என்கின்ற அடிப்படையில் அவர்களுடைய பேசினேன். வட தமிழகத்தை சேர்ந்த தலித் சகோதரிகளை எப்பொழுது சந்தித்தாலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. குறிப்பாக, மிக மோசமான ஜாதியை சூழலில் கூட அவர்கள் எழுச்சி பெரும் கணங்கள் தலித் அரசியலில் மிக முக்கியமான மைல்கள்.
Comments